/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஜி.ஆர்., பல்கலையின் 33வது பட்டமளிப்பு விழா
/
எம்.ஜி.ஆர்., பல்கலையின் 33வது பட்டமளிப்பு விழா
ADDED : நவ 17, 2024 12:34 AM

சென்னை, சென்னை, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்., பல்கலைக்கழகத்தில், டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலையின், 33வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது.
விழாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், பல் மருத்துவம் செவிலியர் துறை, உணவு சமையல் கலை மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற 4,000 மாணவ - மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் ஏ.சி.எஸ்., கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜார்ஜ் குரியன், ''இந்தியா, 2047 ல் வளர்ச்சி பெற்ற நாடாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில், பயணித்துக் கொண்டிருக்கிறோம். தமிழக மாணவர்கள் நாட்டிற்காக பல பெருமைகளை சேர்த்துள்ளனர்.
''அப்துல் கலாம் கூட, உங்கள் மண்ணில் இருந்து வந்து நாட்டுக்காக பல சாதனைகளையும் பெருமைகளையும் சேர்த்தவர். அதுபோல நீங்களும் வாழ்வில் பல பெருமைகளை அடைய வேண்டும்,'' என்றார்.
முன்னதாக தலைவர் ஏ.சி.எஸ். அருண் குமார் சிறப்பு விருந்தினரை கவுரவித்தார். நிகழ்ச்சியில், ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலர் ரவிக்குமார், துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.