/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் ரயில் நிலையத்தில் பதுக்கிய 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
/
தாம்பரம் ரயில் நிலையத்தில் பதுக்கிய 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பதுக்கிய 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பதுக்கிய 34 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஏப் 02, 2025 11:46 PM

தாம்பரம், தாம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், வட மாநிலங்களை சேர்ந்தோர் குடும்பத்தினருடனும், தனியாகவும் தங்கி, பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.
அவர்கள், இங்குள்ளவர்களிடம், ஒரு கிலோ 5 - 10 ரூபாய்க்கு ரேஷன் அரிசியை வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதனால், வடமாநில நபர்களிடையே ரேஷன் அரிசிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சிலர், பலரிடம் ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி, அதை மூட்டை மூட்டையாக கட்டி, ரயில் வாயிலாக தங்களது சொந்த ஊர்களுக்கு கடத்துகின்றனர்.
குறிப்பாக, தாம்பரத்தில் இருந்து ரயில் வாயிலாக ரேஷன் அரிசி கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், தாம்பரம் ரயில் நிலையத்தில், மேற்கு வங்கம் சென்ற சந்திரகாச்சி எக்ஸ்பிரஸில் கடத்துவதற்காக, 4 - 5 பிளாட்பாரத்தை ஒட்டியுள்ள மரத்தடியில் பதுக்கி வைத்திருந்த, 40 மூட்டை ரேஷன் அரிசியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3, 4, 5, 6 ஆகிய பிளாட்பாரங்களில், இருக்கைக்கு அடியிலும், அதை ஒட்டியுள்ள புதரிலும் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே போலீசார் விரைந்து, பிளாட்பாரங்களின் இருக்கை மற்றும் புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 750 கிலோ மதிப்புள்ள, 35 மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அந்த மூட்டைகளை, தாம்பரம் உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

