/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 35 பேர் 'எஸ்கேப்'
/
போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 35 பேர் 'எஸ்கேப்'
ADDED : அக் 16, 2025 03:16 AM
சென்னை: சென்னை மாங்காட்டில், தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து, காவலாளியை தாக்கி, அங்கு சிகிச்சை பெற்று வந்த, 35 பேர் தப்பினர்.
மாங்காடை அடுத்த சக்கரா நகரில், தனியாருக்கு சொந்தமான 'சென்னை டி - அடிக்சன் சென்டர்' என்ற பெயரில், போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, போதை பழக்கத்திற்கு அடிமையான நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த 35 பேர், நேற்று முன்தினம் இரவு, திடீரென ஒன்று கூடி, அங்கு பணியில் இருந்த காவலாளியை தாக்கி விட்டு த ப்பினர்.
மாங்காடு போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். போதை மறுவாழ்வு மையத்தில், சிகிச்சை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதால் தப்பினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தப்பியோடிய நபர்களின் குடும்பங்களுக்கு, போதை மறுவாழ்வு மையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் குறித்து, மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.