/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரை கிலோ ராக்கெட்; அரை கிலோ பிஜிலி தாங்க...!: எடை போட்டு பட்டாசு விற்பனை 'ஜோர்'
/
அரை கிலோ ராக்கெட்; அரை கிலோ பிஜிலி தாங்க...!: எடை போட்டு பட்டாசு விற்பனை 'ஜோர்'
அரை கிலோ ராக்கெட்; அரை கிலோ பிஜிலி தாங்க...!: எடை போட்டு பட்டாசு விற்பனை 'ஜோர்'
அரை கிலோ ராக்கெட்; அரை கிலோ பிஜிலி தாங்க...!: எடை போட்டு பட்டாசு விற்பனை 'ஜோர்'
UPDATED : அக் 17, 2025 02:38 PM
ADDED : அக் 16, 2025 10:40 PM

சென்னை : தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கிலோ கணக்கில் பட்டாசு விற்பனை சூடுபிடித்திருக்கிறது.
'தீபாவளி' பண்டிகைக்கு, இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இப்போதே, தீபாவளி கொண்டாட்டம் களை கட்ட துவங்கிவிட்டது. ஒவ்வொரு குடும்பத்தினரும், ஜவுளி, ஸ்வீட் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
சென்னை முக்கிய பகுதிகளான தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்.சி., சாலைகளில் எங்கு பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதுஒருபுறம் இருக்க, பட்டாசு சத்தமும், சாலைகளில் அதிரடி காட்டுகின்றன.
'90ஸ்' கிட்ஸ்களைபோல, '2கே' கிட்ஸ்களும், தீபாவளிக்கு, இப்போதே பட்டாசுகளை, அப்பா, அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கி, 'டம், டம்' என, வெடிக்க துவங்கிவிட்டனர்.
பொதுவாக, நாம் மளிகை கடைக்கு சென்றால், 'அண்ண, அரை கிலோ தக்காளி கொடுங்க, ஒரு கிலோ உருளை கிழங்கு கொடுங்க, 50 கிராம் சர்க்கரை' என, கேட்டு வாங்கிவோம்.
அதேபோல்தான், இப்போது பட்டாசு விற்பனையும், பல இடங்களில் மாறிவிட்டது. அதாவது, 'அண்ணா அரை கிலோ ராக்கெட், அரை கிலோ பிஜிலி வெடி' என கேட்கும் அளவுக்கு, பட்டாசு விற்பனை ஸ்டைல் மாறிவிட்டது.
கிலோ பட்டாசு, 399 ரூபாய்; 499 ரூபாய்; 599 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள், தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை தேர்வு செய்து, அவற்றை எடைபோட்டு எடுத்து செல்கின்றனர்.
அந்த வகையில், 50 கிராம் கொண்ட 15 செ.மீ., நீளம் கொண்ட கம்பி மத்தாப்பு 48 ரூபாய்க்கும், 90 கிராம் எடை கொண்ட பிஜிலி வெடி பாக்கெட் 54 ரூபாய்க்கும் என, ரதத்திற்கு ஏற்ப, விலை நிர்ணயம் செய்யப்பட்டு கிலோ கணக்கில் விற்கப்படுகிறது.
சென்னை மணலி, வேளச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில், எடை போட்டு பட்டாசுகள் விற்பனை நடந்து வருகிறது.
இதுகுறித்து, பட்டாசு கடை விற்பனையாளர்கள் கூறியதாவது:
முன்பெல்லாம் பட்டாசு டஜன், டஜனாக விற்கப்படும். இப்போது, கிலோ அளவில் விற்பனையானது, பொதுமக்களுக்கு எளிதாகி உள்ளது.
தங்களுக்கு பிடித்தமான பட்டாசுகளை, தேவையான அளவுக்கு தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். நடப்பாண்டு, பட்டாசு விற்பனை விறு, விறுப்பாக நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.