/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் 150 நாட்களில் 150 அறுவை சிகிச்சை 'அப்பல்லோ'வில் சாதனை

ADDED : அக் 17, 2025 12:26 AM
சென்னை: அப்பல்லோ ஓ.எம்.ஆர்., மருத்துவமனையில், 150 நாட்களில், ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம், 150 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள்செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடரமணன் சுவாமிநாதன் ஆகியோர் கூறியதாவது:
ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல் பராமரிப்பு மூட்டு சிகிச்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமான முறையிலான அறுவை சிகிச்சை, சிக்கலான ஒன்று. ஆனால், ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியுடனான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை எளிதில் செய்ய முடியும்.
அதன்படி, ஐந்து மாதங்களில், ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் 150 முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பது என்பது, மருத்துவ துறையில் ஒரு மைல்கல் சாதனை.
வழக்கமான அறுவை சிகிச்சையில், நோயாளிகள் இரண்டு முதல் நான்கு நாட்களில் நடக்க துவங்குவர். முழுமையாக மீண்டு இயல்பு நிலைக்கு வர, ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆகும்.
ஆனால், ரோபோட்டிக் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சையில், 24 மணி நேரத்திற்குள் நடக்கத் துவங்க முடியும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி இல்லாமலும்கூட, நான்கு வாரங்களுக்குள் அன்றாட செயல்களில் ஈடுபட முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.