/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலைகள், மின்கம்பம் சேதம் 205 புகார்களில் 158 நிலுவை தலைமை செயலர் ஆய்வில் அம்பலம்
/
சாலைகள், மின்கம்பம் சேதம் 205 புகார்களில் 158 நிலுவை தலைமை செயலர் ஆய்வில் அம்பலம்
சாலைகள், மின்கம்பம் சேதம் 205 புகார்களில் 158 நிலுவை தலைமை செயலர் ஆய்வில் அம்பலம்
சாலைகள், மின்கம்பம் சேதம் 205 புகார்களில் 158 நிலுவை தலைமை செயலர் ஆய்வில் அம்பலம்
ADDED : அக் 17, 2025 12:26 AM
சென்னை: சென்னையில் சாலைகள் சேதமடைந்தது குறித்து, பல்வேறு துறைகளுக்கு வந்த, 205 புகார்களில், 158 புகார்கள் நிலுவையில் இருப்பது, தலைமை செயலர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னையில், மெட்ரோ ரயில் பணி, அண்ணா சாலை உள்ளிட்ட சில இடங்களில், பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், பாதாள சாக்கடை குழாய்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன.
பணிகள் நடக்கும் இடங்கள் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் சாலைகள், மின்கம்பங்கள் சேதம் குறித்து, மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மாநகராட்சி, மின் வாரியம், நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றுக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால், இந்த புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சாலைகள் சேதம், விபத்துகள் ஏற்படுவது, போக்குவரத்து நெரிசல் தொடர்பான பிரச்னைகள் குறித்து உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்திற்கு, தலைமை செயலர் முருகா னந்தம் அழைப்பு விடுத்தார்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி, மின் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, சாலைகள் சேதம் தொடர்பான புகார்கள் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் சாலைகள் சேதம் குறித்து, கடந்த ஒரு மாதத்தில், 205 புகார்கள் பெறப்பட்டன. இதில், 47 புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள, 158 புகார்கள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
இதில், சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்பட்ட, 95 புகார்களில், 44 புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்று துறை வாரியாக புகார்கள் கிடப்பில் போடப்பட்டது குறித்து, தலைமை செயலர் விளக்கம் கேட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.