/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண்புரை சிகிச்சைக்கு 35 பேர் தேர்வு
/
கண்புரை சிகிச்சைக்கு 35 பேர் தேர்வு
ADDED : மார் 18, 2024 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மடிப்பாக்கம்:செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் ரோஸ் கார்டன் லயன்ஸ் கிளப் இணைந்து, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில், மடிப்பாக்கத்தில் நேற்று, இலவச கண் நோய் பாதிப்பு கண்டறிதல் மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது.
காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடந்த இம்முகாமில், 106 பேருக்கு, கண் நோய் மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 35 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும், சங்கர நேத்ராலயா மருத்துவமனை சார்பில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படும். தவிர, போக்குவரத்து, உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம்.

