/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 மாதத்தில் 377 மரங்கள் ' அவுட் '
/
2 மாதத்தில் 377 மரங்கள் ' அவுட் '
ADDED : டிச 03, 2024 12:51 AM
சென்னை, டிச. 3-
வடகிழக்கு பருவமழை துவங்கி, அக்., 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 79.8 செ.மீ., மழை பெய்துள்ளது.
இந்த மழை காரணமாக, 1,225 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது. அவற்றில், பெரும்பாலான இடங்களில் இருந்து வெள்ளம் அகற்றப்பட்ட நிலையில், எட்டு இடங்களில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.
அதேபோல, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக, 377 மரங்கள் வேரோடு அகற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. வருங்காலங்களில் மழைநீர் தேங்காதவாறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்கு, அக்., மாதம் முதல் 377 மரங்கள் சாய்ந்துள்ளன. இதில், 'பெஞ்சல்' புயலால் மட்டும், 134 மரங்கள் சாய்ந்தன. அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளன.
அந்த இடங்களின் அருகில், மரக்கன்றுகள் நடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 26.80 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.