/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்து நிறுத்தங்களில் 38,860 கிலோ குப்பை அகற்றம்
/
பேருந்து நிறுத்தங்களில் 38,860 கிலோ குப்பை அகற்றம்
பேருந்து நிறுத்தங்களில் 38,860 கிலோ குப்பை அகற்றம்
பேருந்து நிறுத்தங்களில் 38,860 கிலோ குப்பை அகற்றம்
ADDED : டிச 31, 2024 12:35 AM
சென்னை, சென்னையில் உள்ள, 1,363 பேருந்து நிறுத்தங்களில், 38,860 கிலோ திடக்கழிவுகளை மாநகராட்சி அகற்றியுள்ளது.
தீவிர துாய்மை பணியின் கீழ், சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பை, கட்டட கழிவு, சாலையோரங்கள் மற்றும் சாலை மையத் தடுப்புகளில் உள்ள மண், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணி ஆக., 21ம் தேதி முதல் நடந்து வருகிறது.
அதன்படி, 1,363 பேருந்து நிறுத்தங்களில் நேற்று, தீவிர துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், 21,850 கிலோ குப்பை, 17,020 கிலோ கட்டட கழிவு என, 38,860 கிலோ கழிவு அகற்றப்பட்டது.
மேலும், 3,954 சுவரொட்டிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட, 120 பேனர்கள் அகற்றப்பட்டன. அத்துடன், 5,543 பேருந்து நிழற்குடை இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. நிறுத்தங்களில், 180 சிறு, பழுது கண்டறியப்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளன.