/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மசூதிக்கு 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
/
மசூதிக்கு 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 20, 2024 12:25 AM
சென்னை, சென்னை விமான நிலைய அலுவலகத்திற்கு, நேற்று காலை, 6:20 மணியளவில் 'இ-மெயில்' ஒன்று வந்தது.
அதில், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பாசி ஆசூர்கானா மசூதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள் உடனே சம்பவம் குறித்து அண்ணாசாலை ஆய்வாளர் மோகன்தாசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் பிளாக்கியுடன் மசூதி முழுதும் சோதனை மேற்கொண்டனர்.
காலை, 11:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் வெடிப் பொருட்கள் ஏதும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
சம்பவம் குறித்து அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஐந்து நாட்களில், 3 முறை மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.