UPDATED : ஜூன் 23, 2025 03:30 PM
ADDED : ஜூன் 23, 2025 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்':திருவொற்றியூர், டி.எஸ்.ஆர்., நகர் ஒற்றவாடை தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 24. கடந்த 8ம் தேதி இரவு, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது யமஹா பைக் திருட்டு போனது.
விசாரித்த திருவொற்றியூர் போலீசார், பொன்னேரியைச் சேர்ந்த சாரதி, 20, சூர்யா, 23, ரிஷி கேசவன், 23, விஜய், 19, ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்தனர். விசாரணையில், சாரதி, சூர்யா மற்றும் தலைமறைவாக உள்ள அருண் ஆகிய மூவரும் சேர்ந்து, பைக்கை திருடி வந்து ரிஷி கேசவனிடம் விற்றுள்ளனர்.
ரிஷிகேசவன் தன் நண்பர் விஜய்யுடன் சேர்ந்து, பைக்கின் பாகங்களை கழற்றி வேறு பைக்கில் பொருத்தியதும் தெரியவந்தது.
அருணை போலீசார் தேடி வருகின்றனர்.

