ADDED : மே 22, 2025 12:29 AM
கொத்தவால்சாவடி, மின்ட் தெருவில் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை நடப்பதாக, கொத்தவால்சாவடி போலீசாருக்கு, கடந்த 13ம் தேதி தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற நபரிடம் சோதனை மேற்கொண்டனர்.
இதில், 3.88 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் சிக்கியது. விசாரணையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த மணிஷ்குமார், 24, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின்படி ரோஹித்குமார், 25, என்பவரை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், கொத்தவால்சாவடியை சேர்ந்த தர்ஷன், 25, ஏழுகிணறு அமீத் அபாத், 26, திருவல்லிக்கேணி முகமது சித்திக், 35, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார், 39, ஆகிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 77.88 கிராம் மெத் ஆம்பெட்டமைன், இரண்டு இருசக்கர வாகனங்கள், நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ----------