ADDED : நவ 17, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்:கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர், மங்களபுரம், சீமத்தம்மன் புதிய காலனியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 10 கிராம் கொண்ட 30 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொளத்துார், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த வாசு, 24 ; கரண், 19 ; பெரம்பூரைச் சேர்ந்த சரத், 23 மற்றும் பெரவள்ளூரைச் சேர்ந்த கார்த்திக், 25 ; ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் கஞ்சா விற்பனை கண்காணிக்கப்படுகிறது.