/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 4 பேர் கைது
/
ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 4 பேர் கைது
ADDED : ஏப் 27, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ைஹதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல்., டி - 20 கிரிக்கெட் போட்டி நடந்தது.
இப்போட்டிக்கான டிக்கெட்டுகள், வழக்கம்போல ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டன. இதனால் ஏராளமானோர் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
அவர்களை குறி வைத்து, சிலர் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களில் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு, 33, என்பவர் உட்பட நான்கு பேரை, திருவல்லிக்கேணி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்து, ஏழு டிக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

