/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விரைவு ரயில் பயணியரிடம் திருட்டு 4 பேர் கைது; 11 போன்கள் பறிமுதல்
/
விரைவு ரயில் பயணியரிடம் திருட்டு 4 பேர் கைது; 11 போன்கள் பறிமுதல்
விரைவு ரயில் பயணியரிடம் திருட்டு 4 பேர் கைது; 11 போன்கள் பறிமுதல்
விரைவு ரயில் பயணியரிடம் திருட்டு 4 பேர் கைது; 11 போன்கள் பறிமுதல்
ADDED : மே 22, 2025 12:14 AM

சென்னை ஒடிசா மாநிலம் புரியில் இருந்து, கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் வந்த சிறப்பு ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியில் பயணித்த பயணியரிடம், எட்டு மொபைல் போன்கள் திருடு போயின.
அதேபோல, சென்ட்ரலில் இருந்து கடந்த 19ம் தேதி மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்ட ரயிலில், பயணியிடம் மொபைல் போன்கள் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில், ஒடிசா மாநிலம் புரியில் இருந்து நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல் வந்த சிறப்பு ரயிலில், முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணியரிடம் திருட்டில் ஈடுபட முயன்ற இரண்டு பேரை, போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியர் காத்திருப்போர் அறை அருகே, மேலும் இருவர் அகப்பட்டனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டத்தைச் சேர்ந்த பாந்திபட்டி கிராந்தி 32, தேவர் கொண்ட காந்தி 42, மேகலா சாகர் 27, மேகலா ராஜீ ,27, ஆகியோர் என்பதும், புரி சிறப்பு விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களில், முன்பதிவில்லா பெட்டிகளில் நெரிசலை பயன்படுத்தி மொபைல் போன்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 11 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.