sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'மெட்ரோ' பணித்தளத்தில் இரும்பு திருடிய 4 பேர் கைது

/

 'மெட்ரோ' பணித்தளத்தில் இரும்பு திருடிய 4 பேர் கைது

 'மெட்ரோ' பணித்தளத்தில் இரும்பு திருடிய 4 பேர் கைது

 'மெட்ரோ' பணித்தளத்தில் இரும்பு திருடிய 4 பேர் கைது


ADDED : ஜன 31, 2026 05:05 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கம்: மெட்ரோ ரயில் பணித்தளத்தில் இரும்பு பிளேட்டுகளை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

வளசரவாக்கம், ஆற்காடு சாலையில், வளசரவாக்கம் மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. அப்பகுதியில் மெட்ரோ ரயில் கட்டு மான பணிகள் நடக்கின்றன. இப்பணிகளுக்காக இறக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரும்பு பிளேட்டுகள், கடந்த 18ம் தேதி திருடுபோனது.

இது குறித்து, மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும், 'எல் அண்டு டி' நிறுவனத்தின் துணை மேலாளரான போரூரைச் சேர்ந்த தாமு, 26, என்பவர், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், ராமாபுரத்தைச் சேர்ந்த எழிலரசன், 22, நேதாஜி, 24, வளசரவாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 20, சிவசங்கர், 20, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us