/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டுமான பணியாளர்களிடம் போன் திருடிய 4 பேர் கைது
/
கட்டுமான பணியாளர்களிடம் போன் திருடிய 4 பேர் கைது
ADDED : ஜூலை 20, 2025 11:29 PM
பூக்கடை:கட்டுமான பணியாளர்களிடம் மொபைல் போன்கள் திருடிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பூக்கடை, பந்தர் தெருவில், புதிதாக கட்டுமானம் நடக்கும் இடத்தில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த நாராயண்ராய், 49, அவரது மகன் சத்யஜித் ராய் உள்ளிட்டோர் தங்கியிருந்து, கட்டுமான பணி செய்து வருகின்றனர்.
கடந்த 13ம் தேதி இரவு, கட்டடத்தில் நுழைந்த மர்ம நபர்கள் துாங்கி கொண்டிருந்த சத்யஜித் ராயின் மொபைல்போன் உட்பட ஐந்து பேரின் மொபைல் போன்களை திருடிச் சென்றனர்.
இது குறித்து பூக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், கடலுார் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த தமிழ்வாணன், 22, சேரன், 21, துரைபாண்டி, 22, எர்ணாவூரைச் சேர்ந்த இளமாறன், 19, உள்ளிட்ட நான்கு பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் நான்கு பேரையும் நேற்று கைது செய்து, நான்கு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.