/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்டிய பா.ஜ.,வினர் 4 பேர் கைது
/
டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்டிய பா.ஜ.,வினர் 4 பேர் கைது
டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்டிய பா.ஜ.,வினர் 4 பேர் கைது
டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்டிய பா.ஜ.,வினர் 4 பேர் கைது
ADDED : மார் 21, 2025 12:18 AM

மேடவாக்கம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி, போராட்டம் நடத்தினார். அப்போது, மதுபானக் கடைகளில் முதல்வர் படம் மாட்டப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி, சென்னை, மேடவாக்கம் மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில், பா.ஜ.,வை சேர்ந்த, சென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் மாலா தலைமையில், 20க்கும் மேற்பட்டோர், முதல்வர் ஸ்டாலின் படத்தை மாட்டி, ஸ்டிக்கர் ஒட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேடவாக்கம் - பரங்கிமலை பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில், அன்னபூரணி தலைமையிலான தொண்டவர்கள், முதல்வர் படத்தை ஒட்டினர்.
இது தொடர்பாக, டாஸ்மாக் விற்பனையாளர், மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதல்வர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிந்து, அன்னபூரணி, விஜயகுமார் உள்ளிட்ட நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, பா.ஜ., மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கட்சியினர் காவல் நிலையத்தில் குவிந்து, வாகனத்தை தடுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பின், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.