/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்பியில் சிக்கி 4 எருமை பலி
/
மின் கம்பியில் சிக்கி 4 எருமை பலி
ADDED : டிச 30, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவரம்: சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில், நேற்று மாலை குடியிருப்புகளுக்கு செல்லும் மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது, அவ்வழியாக மேய்ச்சலுக்கு சென்ற, அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன், 35, என்பவருக்கு சொந்தமான நான்கு எருமைகள் சிக்கி உயிரிழந்தன.
சோத்துப்பெரும்பேடு மின் வாரியத்தினர், அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

