/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் வைத்திருந்த 4 பேர் கைது
/
போதை பொருள் வைத்திருந்த 4 பேர் கைது
ADDED : ஏப் 22, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் சாலையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
அவர்களது உடைமைகளை போலீசார் சோதனை செய்ததில் 3.6 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
போதை பொருள் வைத்திருந்த பெரம்பூரைச் சேர்ந்த பாலாஜி, 34, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த முகமது சுகைல் உசேன், 23, முகமது அப்துல்லா, 25, முகமது யூசப், 35, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். மூன்று மொபைல் போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.