/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெக்கானிக்கிடம் மொபைல் போன் பறித்த சிறுவன் உட்பட 4 பேர் கைது
/
மெக்கானிக்கிடம் மொபைல் போன் பறித்த சிறுவன் உட்பட 4 பேர் கைது
மெக்கானிக்கிடம் மொபைல் போன் பறித்த சிறுவன் உட்பட 4 பேர் கைது
மெக்கானிக்கிடம் மொபைல் போன் பறித்த சிறுவன் உட்பட 4 பேர் கைது
ADDED : ஏப் 03, 2025 12:37 AM

சென்னை, திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரைச் சேர்ந்தவர் தினேஷ், 18 ; 'ஏசி' மெக்கானிக். கடந்த, 31ம் தேதி இரவு மெரினா கடற்கரை, நேதாஜி சிலை பின்புறம் படகில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நான்கு மர்ம நபர்கள், அவரை மிரட்டி மொபைல் போனை பறித்து தப்பினர்.
மெக்கானிக் அளித்த புகாரில், மெரினா போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மோகன், 20, கோகுல்ராஜ், 18, முகமது ஷெரிப், 18 மற்றும் 16 வயது சிறுவன் ஈடுபட்டது தெரியவந்தது.
நான்கு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், மூன்று பேரை புழல் சிறையிலும், சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மோகன், ஷெரிப் மீது ஏற்கனவே, இரு திருட்டு வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.