/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடில் கார் பைனான்சியரை கடத்திய பெண் உட்பட 4 பேர் கைது
/
கோயம்பேடில் கார் பைனான்சியரை கடத்திய பெண் உட்பட 4 பேர் கைது
கோயம்பேடில் கார் பைனான்சியரை கடத்திய பெண் உட்பட 4 பேர் கைது
கோயம்பேடில் கார் பைனான்சியரை கடத்திய பெண் உட்பட 4 பேர் கைது
ADDED : டிச 22, 2024 12:26 AM

கோயம்பேடு, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரை ரகுபதி, 30. இவர், சென்னை சாலிகிராமத்தில் தங்கி, கார்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர், தன்னிடம் கார் அடமானத்திற்கு உள்ளதாக சமூக வலைதளமான 'பேஸ்புக்'கில் விளம்பரம் செய்திருந்தார். அந்த விளம்பரத்தை பார்த்து, குன்றத்துாரைச் சேர்ந்த கவுதம் என்பவர் துரை ரகுபதியை தொடர்பு கொண்டு, காரை அடமானம் வாங்குவதாக தெரிவித்தார்.
கோயம்பேடு பகுதிக்கு காருடன் வரும்படி கூறினார். இதை நம்பிய துரை ரகுபதி, கடந்த 19ம் தேதி இரவு காருடன் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்றார்.
அங்கு காத்திருந்த கவுதம் மற்றும் அவரது நண்பர்கள், துரை ரகுபதியை அதே காரில் கடத்தி சென்றனர். மேலும், அவரை தாக்கி மொபைல் போன் மற்றும் காரை பறித்து தப்பினர்.
காயமடைந்த துரை ரகுபதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட குன்றத்துார் பெரிய காலனியைச் சேர்ந்த கவுதம், 27, அவரது தோழி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஸ்வேதா, 23, கோயம்பேடு, நியூ காலனியைச் சேர்ந்த நாகராஜன், 32, அண்ணா நகர், எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்த கிஷோர் பாலாஜி, 23, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.