/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.25 கோடி சொத்து அபகரிப்பு பெண்கள் உட்பட 4 பேர் சிக்கினர்
/
ரூ.1.25 கோடி சொத்து அபகரிப்பு பெண்கள் உட்பட 4 பேர் சிக்கினர்
ரூ.1.25 கோடி சொத்து அபகரிப்பு பெண்கள் உட்பட 4 பேர் சிக்கினர்
ரூ.1.25 கோடி சொத்து அபகரிப்பு பெண்கள் உட்பட 4 பேர் சிக்கினர்
ADDED : ஏப் 05, 2025 12:22 AM

சென்னை,
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி, 65. இவருக்கு, எர்ணாவூர், ஜெய்ஹிந்த் நகரில், 2,016 சதுரடியில் நிலம் உள்ளது. அவரது சொத்தை சிலர் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்தது தெரியவந்தது. இது குறித்து பரமேஸ்வரி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.
வழக்கு பதிவு செய்த, நிலமோசடி புலனாய்வு பிரிவு போலீசார், ஆய்வாளர் பாரதி தலைமையில் தனிப்படை அமைத்தனர்.
விசாரணையில், மாதவரத்தைச் சேர்ந்த ஆனந்தன், 40, எர்ணாவூரைச் சேர்ந்த சரவணன், 52, ஆகியோர், போலி ஆவணம் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரித்தது தெரியவந்தது.
கடந்த பிப்., 27ம் தேதி இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த ருக்மணி, 63, ராஜேஸ்வரி, 60, நாகேஸ்வரி, 70, முருகன், 50, ஆகிய நான்கு பேரையும், நேற்று கைது செய்தனர்.