/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கு ஸ்ரீவில்லிபுத்துாரில் 4 பேர் சரண்
/
தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கு ஸ்ரீவில்லிபுத்துாரில் 4 பேர் சரண்
தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கு ஸ்ரீவில்லிபுத்துாரில் 4 பேர் சரண்
தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கு ஸ்ரீவில்லிபுத்துாரில் 4 பேர் சரண்
ADDED : மார் 05, 2024 12:34 AM
கூடுவாஞ்சேரி,வண்டலுார் தி.மு.க., நிர்வாகி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நேற்று சரணடைந்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றிய துணைத் தலைவராகவும், காட்டாங்கொளத்துார் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலராகவும் இருந்தவர் ஆராவமுதன், 52.
மார்ச் 1ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, வண்டலுாரில் திறக்கப்பட இருந்த பேருந்து பயணியர் நிழற்குடையை பார்வையிட பிப்., 29ம் தேதி வண்டலுாருக்கு காரில் சென்றார்.
வண்டலுார் மேம்பாலம் அருகே, மர்ம கும்பலால், வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இதில், ஐந்து பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், காஞ்சிபுரம், பெரியார் தெருவைச் சேர்ந்த கனகராஜ், 31, வண்டலுார், காந்தி நகரைச் சேர்ந்த அருண் ராஜ், 31,
அவிநாசி, ஏ.வி.எஸ்., காலனியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், 21, அவிநாசி, பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 20, ஆகிய நான்கு பேரும், நேற்று விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். விரைவில் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக, ஓட்டேரி போலீசார் தெரிவித்தனர்.

