ADDED : மார் 17, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்:கொளத்துார் ராஜமங்கலம் மக்காரம் தோட்டம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சரஸ்வதி, 55. இவர்களது வீட்டின் ஒரு பகுதியில், அரக்கோணத்தை சேர்ந்த கார்த்திக், 40 என்பவர் வாடகைக்கு இருந்தார்.
சரஸ்வதி தன் வீட்டு பீரோவில் இருந்த, 4 சவரன் நகையை காணவில்லை என, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நகையை, வாடகைக்கு இருந்த கார்த்திக் திருடியது விசாரணையில் தெரிந்தது.
கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகையை மீட்டனர்.

