/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீபாவளி பண்டிகைக்கு 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
/
தீபாவளி பண்டிகைக்கு 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : அக் 11, 2025 01:34 AM
சென்னை, தீபாவளி பண்டிகையை ஒட்டி, செங்கல்பட்டு- - திருநெல்வேலி, சென்ட்ரல் -- போத்தனுார் உட்பட நான்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலியில் இருந்து வரும் 21, 22ம் தேதிகளில் அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு வரும்.
அதேபோல, செங்கல்பட்டில் இருந்து 21, 22ம் தேதிகளில் மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:55க்கு திருநெல்வேலிக்கு செல்லும்.
கோவை போத்தனுாரில் இருந்து, வரும் 19ம் தேதி, இரவு 11:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:45க்கு சென்ட்ரல் வரும்
சென்ட்ரலில் இருந்து வரும் 20ம் தேதி, பகல் 12:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு மங்களூர் செல்லும்.
எழும்பூரில் இருந்து 22ம் தேதி 1:25க்கு புறப்படும் ரயில் திருவனந்தபுரம் வடக்கு மறுநாள் காலை 8:00 மணிக்கு செல்லும்; அதேபோல சென்ட்ரல்- - போத்தனுார் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, 12ம் தேதி காலை 8:00 மணிக்கு துவங்கும்.