/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 வீட்டில் 41 சவரன் ரூ.1.10 லட்சம் திருட்டு
/
4 வீட்டில் 41 சவரன் ரூ.1.10 லட்சம் திருட்டு
ADDED : டிச 31, 2024 12:32 AM
திருத்தணி: திருத்தணி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 45. இவர்,
நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை, 50,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல, திருத்தணி மகளிர் காவல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள கணபதி நகரில், ரவி, 52, என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, 10 சவரன் நகை, 50,000 ரூபாயை திருடிச் சென்றனர்.
தொடர்ந்து அதேபகுதியில் வசிக்கும் சாவித்திரி, 72, என்பவரின், வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை, 10,000 ரூபாய் மற்றும் மனோகரன் என்பது வீட்டின் பூட்டை உடைத்து 30,000 ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்களை திருடி சென்றனர்.
இச்சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.