ADDED : மார் 05, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், குன்றத்துார் அருகே வெளிவட்ட சாலையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு நின்ற, திருவள்ளூரைச் சேர்ந்த பூஞ்சோலை, 37, முகுந்தன், 24, ஆகியோரது உடைமைகளை சோதனை செய்ததில், 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 45 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா, லோடு ஆட்டோ, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

