ADDED : அக் 21, 2026 10:30 PM
அ நிறம் | அளவு
சென்னை: பட்டினப்பாக்கத்தில் இருந்து, பூந்தமல்லிக்கு, தடம் எண்: ‘49எப்’ என்ற மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து, நேற்று முன் தினம் இரவு, மத்திய கைலாஷ் அருகே சென்று கொண்டிந்தது. அப்போது, அப்பகுதியில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத, 45 வயது நபர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து குறித்து, ஓட்டுனர் ஜான்தாமஸ், 33, நடத்துனர் பாக்கியநாதன், 52, ஆகியோரிடம், மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
