/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாவட்ட கேரம் போட்டி 465 பேர் பங்கேற்பு
/
மாவட்ட கேரம் போட்டி 465 பேர் பங்கேற்பு
ADDED : மார் 02, 2026 05:40 AM

சென்னை: மாவட்ட அளவிலான கேரம் போட்டியில், 465 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றனர்.
சென்னை மாவட்ட கேரம் சங்க ஆதரவில், ஒய்.எம்.சி.ஏ., மெட்ராஸ் சார்பில், சென்னை மாவட்ட அளவிலான கேரம் போட்டி, பிராட்வேயில் உள்ள மையத்தில் நடக்கிறது.
சீனியர் ஆண்கள், சீனியர் பெண்கள், பதக்கம் அல்லாத பிரிவு மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட சப் - ஜூனியர் பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் கடும் போட்டி நிலவியது. குறிப்பாக சப் - ஜூனியர் பிரிவில், சிறுவர் - சிறுமியர் தங்கள் துல்லியமான, 'கட், ரீபவுண்டு' அடிகளால், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
இதில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 465 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். இன்று நடக்க உள்ள அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள், மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

