/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேடவாக்கம் ஊராட்சியில் மக்களுக்கு பிரியாணி விருந்து
/
மேடவாக்கம் ஊராட்சியில் மக்களுக்கு பிரியாணி விருந்து
மேடவாக்கம் ஊராட்சியில் மக்களுக்கு பிரியாணி விருந்து
மேடவாக்கம் ஊராட்சியில் மக்களுக்கு பிரியாணி விருந்து
ADDED : மார் 02, 2026 05:41 AM

மேடவாக்கம்: தமிழக முதல்வர் ஸ்டாலினின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, மேடவாக்கத்தில் நேற்று தி.மு.க., கம்பத்தில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
சென்னை தெற்கு மாவட்டம், பரங்கிமலை தெற்கு ஒன்றியம் தி.மு.க., இளைஞர் அணி சார்பில் மேடவாக்கத்தில் நேற்று, தமிழக முதல்வரும் தி.மு.க., தலைவருமான ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, விமரிசை யாக சிறப்பிக்கப்பட்டது.
இந்த விழா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ்வரா தலைமையில், ஊராட்சி தலைவர் சிவபூஷ்ணம் ரவி, துணை தலைவர் கோபு, ஒன்றிய கிளைக் கழக துணை செயலர் போஸ், கிளை கழக செயலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
தொடர்ந்து ஊராட்சியின் 12 வார்டுகளிலும் உள்ள தி.மு.க., கம்பத்தில் கட்சி கொடியேற்றப்பட்டது. அந்த கவுன்சிலர்கள் வரவேற்புரை ஆற்றினர்.
பின், பகுதிமக்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தவிர, முதியோர் கருணை இல்லத்தில் தங்கியுள்ளோருக்கு காலை மற்றும் மதியம் உணவு வழங்கப்பட்டது.

