/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 47 தமிழக வீரர்கள் பங்கேற்பு
/
கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 47 தமிழக வீரர்கள் பங்கேற்பு
கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 47 தமிழக வீரர்கள் பங்கேற்பு
கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 47 தமிழக வீரர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 16, 2025 12:13 AM
சென்னை,சத்தீஸ்கரில் இன்று துவங்கியுள்ள, தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 47 தமிழக வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
வாக்கோ இந்தியா கிக் பாக்சிங் சார்பில், தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகள், சத்தீஸ்கர் மாநிலத்தில், தலைநகர் ராய்ப்பூரில் இன்று துவங்கி, 20ம் தேதி வரை நடக்கின்றன.
சீனியர் மற்றும் மாஸ்டர்களுக்காக மட்டும் நடக்கும் இப்போட்டியில், கிக் லைட், லைட் காண்டாக்ட், புல் காண்டாக்ட், லோ கிக், கே 1 - ஸ்டைல், மியூசிக்கல் உள்ளிட்ட ஏழு வகையான பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
தமிழகம் உட்பட, நாடு முழுதும் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். தமிழகம் சார்பில், மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், 47 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். போட்டியில் தேர்வாவோர், சர்வதேச போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெறுவர்.
இதுகுறித்து, தமிழக அணியின் தலைமை பயிற்சியாளரும், தமிழக சங்கத்தின் பொதுச் செயலருமான சுரேஷ் பாபு கூறியபோது, “சர்வதேச போட்டியில் பதக்கங்களை குவிப்பதே இலக்கு. அதனால், பதக்கங்களை குவித்து, நிச்சயம் 'ஓவர் ஆல்' சாம்பியன் கோப்பையுடன் சென்னை திரும்புவோம்,'' என்றார்.