/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
479 கி.மீ., சாலை வெட்டு மாநகராட்சி பகுதியில் சீரமைப்பு
/
479 கி.மீ., சாலை வெட்டு மாநகராட்சி பகுதியில் சீரமைப்பு
479 கி.மீ., சாலை வெட்டு மாநகராட்சி பகுதியில் சீரமைப்பு
479 கி.மீ., சாலை வெட்டு மாநகராட்சி பகுதியில் சீரமைப்பு
ADDED : ஆக 29, 2025 12:19 AM
சென்னை, சென்னை மாநகராட்சியில், 2,995 சாலைகளில், 479.41 கி.மீ., நீள சாலை வெட்டு சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சியில், 418.56 கி.மீ., நீளம் கொண்ட, 488 பேருந்து சாலைகள் மற்றும் 5,665.89 கி.மீ., நீளம் கொண்ட 35,978 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இச்சாலைகளில், 489.22 கோடி ரூபாய் மதிப்பில், 648.75 கி.மீ., நீளத்திற்கு, 3,987சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை, 1,951 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வரும், செப்., 15க்குள் சாலை சீரமைப்பு பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியத்திற்கு 4,982 சாலைகளில், 859.98 கி.மீ., நீளத்திற்கு சாலை வெட்டு பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில், 2,976 சாலைகளில், 476.89 கி.மீ., நீள பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் சாலை வெட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
மின்சார வாரியத்திற்கு, 30 சாலைகளில், 4.72 கி.மீ., நீளத்திற்கு சாலை வெட்டு பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு, 19 சாலைகளில் 2.52 கி.மீ., நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சேவை துறைகளின் வாயிலாக, 2,995 சாலைகளில், 479.41 கி.மீ., சாலை வெட்டு சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதர பணிகள் செப்., மாதத்திற்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

