
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்கு மாம்பலம், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் 48ம் ஆண்டு மாட்டு பொங்கல் கோ பூஜை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் தெருவில் உள்ள கோ ஸம்ரக்ஷண சாலாவில் நேற்று நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு டாக்டர். வி. ராமச்சந்திரன் குழுவினர் மங்கல இசை, 8:30 மணிக்கு மாதங்கி சங்கர் மற்றும் குழுவினர் தேவாரம் மற்றும் திருப்புகழ் இன்னிசை, 10:30 மணிக்கு சிறப்பு கோ பூஜை நடந்தது.
தொடர்ந்து, 11:00 மணிக்கு பசுக்கள் மாட வீதியில் ஊர்வலம் நடந்தது.
இதை முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி பொன் மாணிக்கவேல் துவக்கி வைத்தார்.

