/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரம்பூரில் 4வது ரயில் முனையம் வாரிய ஒப்புதலுக்காக காத்திருப்பு
/
பெரம்பூரில் 4வது ரயில் முனையம் வாரிய ஒப்புதலுக்காக காத்திருப்பு
பெரம்பூரில் 4வது ரயில் முனையம் வாரிய ஒப்புதலுக்காக காத்திருப்பு
பெரம்பூரில் 4வது ரயில் முனையம் வாரிய ஒப்புதலுக்காக காத்திருப்பு
ADDED : ஜன 28, 2025 12:53 AM
சென்னை, ''பெரம்பூரில் நான்காவது புதிய ரயில் முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, ரயில்வே வாரிய ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்,'' என, சென்னை ரயில்கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கூறினார்.
சென்னை அயனாவரத்தில் அவர் அளித்த பேட்டி:
சென்னை ரயில்வே கோட்டம் கடந்த நிதியாண்டில், 4,513 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருந்தது. நடப்பு நிதியாண்டில், டிசம்பர் வரை, 3,300 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், 7.31 மில்லியன் டன்கள் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன.
அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில், 17 ரயில் நிலையங்கள், 200 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணி; 160 கோடி ரூபாயில், 27 நிலையங்களில், 27 நடைமேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடக்கின்றன.
சென்னை ரயில் கோட்டத்தில், தற்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய இடங்களில் ரயில் முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பயணியர் தேவை அதிகரித்து வருவதால், பெரம்பூரில் நான்காவது ரயில் முனையம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்கான, திட்ட அறிக்கை, ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
ரயில் நிலையங்களில், பயணியர் அடிப்படை வசதிக்காக, 95 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.