ADDED : அக் 23, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
சென்னை விமான நிலைய அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, 'இ-மெயில்' ஒன்று வந்தது. அதில், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பாசி ஆசூர்கானா மசூதியில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் இருந்தது. இதுகுறித்து, அண்ணாசாலை போலீசாருக்கு மோகன்தாஸ் தகவல் கொடுத்தார். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், மசூதி முழுதும் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர்.
வெடிபொருட்கள் ஏதும் இல்லை; மிரட்டல் புரளி என தெரிந்தது. அண்ணாசாலை போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த, 9 நாட்களில், 4வது முறையாக மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

