ADDED : ஜூன் 08, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடக்கு கடற்கரை,ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் சையது ஹைதுர்ஸ், 33. இவர், கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். கடந்த மாதம் 31ம் தேதி இரவு, கைப்பையில் பணத்துடன், வடக்கு கடற்கரை, அங்கப்பன் நாயக்கன் தெருவில் நடந்து சென்றார்.
அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், சையது ஹைதுர்ஸை வழிமறித்து, அவர் கையில் வைத்திருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். அவர் கத்தவே, மர்ம நபர்கள் பைக்கில் ஏறி தப்பினர்.
இது குறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட பெரம்பூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 22, சரண், 21, நவீன்குமார், 19, சரண், 20, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை, நேற்று கைது செய்தனர். இதில், பாலகிருஷ்ணன், நவீன்குமார் ஆகியோர் மீது அடிதடி வழக்குகள் உள்ளன.