/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை புறநகரில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
/
சென்னை புறநகரில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
ADDED : பிப் 14, 2025 12:13 AM

நீலாங்கரை, இ.சி.ஆர்., அக்கரை சந்திப்பில், நேற்று முன்தினம், நீலாங்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மூன்று பேர் அமர்ந்திருந்த இருசக்கர வாகனத்தை மடக்கி விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.
விசாரணையில், திருவான்மியூரைச் சேர்ந்த ஆனந்த், 30, சானுசீமோன், 22, ரிச்சர்ட் கிராந்தி, 30, என்பது தெரிந்தது. மூன்று பேரையும் கைது செய்த போலீசார், வாகனத்தில் இருந்த, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
↓சேலையூரை அடுத்த திருவஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற கிழக்கு தாம்பரம், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த சுபாஷ், 25, என்பவரை மடக்கி சோதனையிட்டனர். அவரிடம் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.10 கிலோ கஞ்சா சிக்கியது. அவரை கைது செய்து, கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பீஹார் வாலிபரிடம் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
↓குன்றத்துாரை அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட் லாரி பார்க்கிங் பகுதியில், தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்ததில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த உத்பால் குமார், 22, என்பதும், 8.400 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த உத்பால் குமார், பீஹாரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, விற்பனை செய்தது தெரியவந்தது.