ADDED : அக் 06, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் மாலை மாநில கல்லுாரி மாணவர் சுந்தர், 19, நடந்து சென்றார். அப்போது, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர் வழிமறித்து, கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பினர்.
படுகாயமடைந்த மாணவனை, ரயில்வே போலீசார் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து, பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர். இதில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஈஸ்வர், 20, ஹரிபிரசாத், 20, கமலேஷ்வரன், 20, யுவராஜ், 20, ஆல்பர்ட், 20, ஆகிய ஐந்து பேர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.