/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கெட்டுப்போன 5 கிலோ மீன்கள் 'பீச்' உணவகங்களில் பறிமுதல்
/
கெட்டுப்போன 5 கிலோ மீன்கள் 'பீச்' உணவகங்களில் பறிமுதல்
கெட்டுப்போன 5 கிலோ மீன்கள் 'பீச்' உணவகங்களில் பறிமுதல்
கெட்டுப்போன 5 கிலோ மீன்கள் 'பீச்' உணவகங்களில் பறிமுதல்
ADDED : பிப் 20, 2025 01:05 AM
சென்னை,
பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் உள்ள சாலையோர உணவகங்களில் வழங்கப்பட்ட மீன்களில் புழு இருப்பதாக, வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம், சில நாட்களுக்கு முன் நடந்தது.
இதுகுறித்த தகவல் அடிப்படையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், பெசன்ட் நகர் கடற்கரை பகுதி உணவகங்களில், நேற்று சோதனை நடத்தினர்.
மொத்தம், 12 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 5 கிலோவிற்கும் அதிகமான கெட்டுப்போன மீன்களை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
சுகாதாரமாக பராமரிக்காத கடைகளுக்கும் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டதுடன், உரிமம் பெற்று உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.