/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு ஒப்படைப்பு தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு
/
வீடு ஒப்படைப்பு தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு
ADDED : செப் 25, 2024 12:12 AM
சென்னை, சென்னை, சோழிங்கநல்லுார் அடுத்த செம்மஞ்சேரியில், 'பார்சூன் இன்பிரா மற்றும் கன்ஸ்டிரக் ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, டி.பிரகாஷ்குமார் என்பவர் பணம் செலுத்தி இருந்தார்.
கடந்த, 2014ல் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2016ல் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைத்து இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காததால், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பிரகாஷ் குமார் முறையிட்டார்.
இந்த மனுவை விசாரித்த, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர், என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் வீடு ஒப்படைப்பு தாமதமானால், ஒரு நாளைக்கு 15 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்குவதாக ஒப்பந்தத்தில் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இதன் அடிப்படையில் இழப்பீடு அளிக்கவில்லை.
வீடு வாங்குவதற்காக மனுதாரர் செலுத்திய தொகையை திருப்பி அளிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த காலத்தில் வீடு கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணமாக, கட்டுமான நிறுவனம், 5 லட்சம் ரூபாய், வழக்கு செலவுக்கு 25,000 ரூபாயை 90 நாட்களுக்குள் மனுதாரருக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.