ADDED : அக் 03, 2024 12:34 AM
கோயம்பேடு, நெற்குன்றத்தில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை, போலீசார் கைது செய்தனர்.
நெற்குன்றம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக, கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நெற்குன்றம் எஸ்டேட் குட்டை பகுதியில், சட்டவிரோதமாக போதை தரும் உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த, நெற்குன்றம் ஜெயராமன் நகரைச் சேர்ந்த கணபதி, 19, ஆழ்வார்திருநகர் பாலாஜி நகரைச் சேர்ந்த மோகன்ராஜ், 23, நெற்குன்றம் அபிராமி நகரை சேர்ந்த விஜய், 19, விருகம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த சந்தோஷ், 19, மற்றும் லோகேஷ், 19, ஆகிய ஐந்து பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 48 போதை மாத்திரைகள் மற்றும் 17,000 ரூபாய், 5 மொபைல் போன், 2 கத்தி, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர்கள், மும்பையில் இருந்து மாத்திரைகளை வாங்கி, ரயில் வாயிலாக சென்னை கொண்டு வந்து விற்பனை செய்தது தெரிந்தது.