/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துணிக்கடையில் தவறவிட்ட 5 சவரன் மீட்டு ஒப்படைப்பு
/
துணிக்கடையில் தவறவிட்ட 5 சவரன் மீட்டு ஒப்படைப்பு
துணிக்கடையில் தவறவிட்ட 5 சவரன் மீட்டு ஒப்படைப்பு
துணிக்கடையில் தவறவிட்ட 5 சவரன் மீட்டு ஒப்படைப்பு
ADDED : டிச 28, 2025 05:29 AM

வண்ணாரப்பேட்டை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நர்சின், 20. சென்னை, வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி பிரதான தெருவில் உள்ள உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளார்.
எம்.சி., சாலையில் உள்ள துணிக்கடைக்கு சென்று வீடு திரும்பியபோது, அவர் அணிந்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐந்து சவரன் தங்க செயின் மாயமானது தெரிந்தது.
அவரது புகாரை, நேற்று காலை பெற்ற போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், துணிக்கடையில் கீழே விழுந்த செயினை, ஒரு பெண் எடுத்துச் சென்றது தெரிந்தது.
அப்பெண்ணை பிடித்தபோது, கீழே கிடந்ததால் எடுத்துச் சென்றதாக கூறினார். செயினை மீட்ட போலீசார், நர்சினை வரவழைத்து, தங்கச் செயின் ஒப்படைத்தனர். போலீசாருக்கு, அவர் நன்றி தெரிவித்தார்.