/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ்சில் இருந்த டிக்கெட் இயந்திரம் திருட்டு
/
பஸ்சில் இருந்த டிக்கெட் இயந்திரம் திருட்டு
ADDED : டிச 28, 2025 05:38 AM
சென்னை: ஓட்டுநர், நடத்துநர் இருவரும் சாப்பிட சென்ற நேரத்தில், மாநகர பேருந்தில் இருந்த டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை திருடி சென்ற நபரை, போலீசார் தேடுகின்றனர்.
வேளச்சேரி - தாம்பரம் வழித்தடம் 51, டி.என்:01-என்9942 என்ற பதிவெண் கொண்ட மாநகர பேருந்தில், நேற்று ஓட்டுநராக சுதாகர், 41, நடத்துநராக ஜோதி, 40, பணியில் இருந்தனர்.
வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நிறுத்தி, டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை ஓட்டுநர் இருக்கை அருகில் வைத்துவிட்டு, இருவரும் சாப்பிட சென்றனர்.
திரும்பி வந்து பார்த்தபோது, டிக்கெட் வழங்கும் இயந்திரம் திருடப்பட்டதை கண்டனர். நடத்துநர் அளித்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார், திருடி சென்ற நபரை தேடுகின்றனர்.

