/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5 வயது குழந்தைக்கு புற்றுநோய் 'அப்பல்லோ'வில் நவீன சிகிச்சை
/
5 வயது குழந்தைக்கு புற்றுநோய் 'அப்பல்லோ'வில் நவீன சிகிச்சை
5 வயது குழந்தைக்கு புற்றுநோய் 'அப்பல்லோ'வில் நவீன சிகிச்சை
5 வயது குழந்தைக்கு புற்றுநோய் 'அப்பல்லோ'வில் நவீன சிகிச்சை
ADDED : நவ 07, 2025 12:22 AM
சென்னை: தீவிர தைராய்டு புற்றுநோய்க்குள்ளான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, 5 வயது பெண் குழந்தைக்கு, மிகவும் நுட்பமான அறுவை சிகிச்சையை செய்து, அப்பல்லோ குழந்தைகள் நல டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை மற்றும் தலை, கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் பாலாஜி கூறியதாவது:
கழுத்து பகுதியில், பெரிய வீக்கத்துடன் இருந்த அக்குழந்தையை பரிசோதித்ததில், 'பாப்பிலரி தைராய்டு கார்சினோமா' எனப்படும் தைராய்டு புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது.
அக்கட்டி, கழுத்து பகுதியையும், குறிப்பாக குரல்வளை நரம்பையும் சுற்றி பரவியிருந்தது. அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றினாலும், பிற உறுப்புகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் இருந்தது.
மருத்துவமனையின் குழந்தைகள் நலன், புற்றுநோயியல், அகச்சுரப்பியல் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், நுட்பமான அறுவை சிகிச்சையை செய்தனர்.
அதன்படி, கழுத்து பகுதியில் இருந்த முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பின்றி, புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. தற்போது, அக்குழந்தை நலமுடன் உள்ளது.
இந்தியாவிலேயே, இவ்வளவு சிறு வயதிலான குழந்தைக்கு, தீவிர தைராய்டு புற்றுநோய் கட்டி அகற்றப்படுவது, இதுவே முதன்முறை.
இவ்வாறு அவர் கூறினார்.

