/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேனாம்பேட்டையில் 9, 10ல் குடிநீர் நிறுத்தம்
/
தேனாம்பேட்டையில் 9, 10ல் குடிநீர் நிறுத்தம்
ADDED : நவ 07, 2025 12:23 AM
சென்னை: குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுவதால், வரும் 9, 10ம் தேதிகளில், மூன்று மண்டலங்களில் குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தேனாம்பேட்டை மண்டலம், ஆர்.கே.சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில், பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை செய்ய உள்ளது.
எனவே, 9ம் தேதி காலை 10:00 முதல் 10ம் தேதி காலை 10:00 மணி வரை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில், குழாய்கள் வாயிலாக வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு லாரிகள் வாயிலாக குடிநீர் பெற, https://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்று கொள்ளலாம். குடிநீர் அழுத்தம் இல்லாத பகுதிகளுக்கு வழக்கம்போல், லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

