/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மக்களுடன் முதல்வர்' 500 பயனாளிகள் பயன்
/
'மக்களுடன் முதல்வர்' 500 பயனாளிகள் பயன்
ADDED : ஜன 14, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம், தேனாம்பேட்டை மண்டலம் 112 வார்டில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில் வீட்டு வசதி, காவல் துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் தனித் தனியாக மனுக்கள் பெறப்பட்டன.
தவிர, பெண்களுக்கான 1,000 ரூபாய் உரிமைத்தொகை, மிக்ஜாம் புயலுக்காக வழங்கப்பட்ட 6,000 ரூபாய்க்கான நிவாரணத் தொகைக்கும் விண்ணப்பித்தனர்.
முகாமில், கோடம்பாக்கம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.

