ADDED : ஏப் 04, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், கொருக்குபேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் உத்தரவுப்படி, நேற்று முன்தினம், விம்கோ நகர் ரயில்வே நடைமேடையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பயணியர் அமரும் இருக்கையின் கீழ், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதன்படி, 25 கிலோ எடையுள்ள, 20 மூட்டை அரிசியை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட, 500 கிலோ ரேஷன் அரிசியை, பட்டரவாக்கம், குடிமை பொருள் வழங்கல் சி.ஐ.டி., வசம் ஒப்படைத்தனர்.

