/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கேலோ இந்தியா' பல்கலை போட்டி: தமிழகம் சார்பில் 500 பேர் பங்கேற்பு
/
'கேலோ இந்தியா' பல்கலை போட்டி: தமிழகம் சார்பில் 500 பேர் பங்கேற்பு
'கேலோ இந்தியா' பல்கலை போட்டி: தமிழகம் சார்பில் 500 பேர் பங்கேற்பு
'கேலோ இந்தியா' பல்கலை போட்டி: தமிழகம் சார்பில் 500 பேர் பங்கேற்பு
ADDED : நவ 17, 2025 12:51 AM
சென்னை: ராஜஸ்தானில் நடக்க உள்ள, 4 வது கேலோ இந்தியா' பல்கலை விளையாட்டு போட்டியில் பங்கேற்க, தமிழகத்தின் பல்வேறு பல்கலைகளில் இருந்து, 500 மாணவ - மாணவியர் தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழங்களின் சங்கங்கள் இணைந்து, 4வது 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை, வரும் 24ல் ராஜஸ்தான் மாநிலத்தில் துவக்குகின்றன.
இதில், தடகளம், வாலிபால், கூடைப்பந்து, நீச்சல், டே பிள் டென்னிஸ், டென்னிஸ், பால் பேட்மின்டன் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட் ட விளையாட்டுகள் நடக்க உள்ளன. இதில், புதிதாக சேர்க்கப்பட்ட பீச் வாலிபால் போட்டியும் நடக்கிறது.
போட்டியில், நாடு முழுதும் இருந்து, அகில இந்திய விளையாட்டில் வெற்றி பெற்ற, 5,000த்திற்கும் மேற்பட்ட பல்கலை மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர்.
இதில், தமிழகத்தில் இருந்து மட்டும், சென்னை மற்றும் அண்ணா பல்கலை, எஸ்.ஆர்.எம்., மதுரை காமராஜர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைகளில் இருந்து, 500 மாணவ - மாணவியர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும், கடந்த 2024 - 25ம் ஆண்டில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான போட்டியில், முதல் எட்டு இடங்களை பிடித்தவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது.

