/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடகைக்கு வருகிறது 5,000 எலக்ட்ரிக் 'டூ - வீலர்'
/
வாடகைக்கு வருகிறது 5,000 எலக்ட்ரிக் 'டூ - வீலர்'
ADDED : ஆக 07, 2025 12:34 AM
சென்னை, வாடகை வாகன வணிகம் செய்து வரும், 'பீலைவ் ஈசி' என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், சென்னையில், அடுத்த ஓராண்டில் ஆண்டில், 5,000 'எலக்ட்ரிக்' இருசக்கர வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.
இ - வணிகம், உணவு பொருட்கள், கூரியர் உள்ளிட்ட கடைசி மைல் வினியோகங்களுக்கு, எலக்ட்ரிக் கஇருசக்கர வாகனங்கள் பயன்படுகின்றன. 'பீலைவ் ஈசி' நிறுவனம், தனிநபர் பயன்பாடு உட்பட இந்த வகை வணிகங்களுக்கும், இருசக்கர மின் வாகனங்களை வாடகைக்கு வழங்கி வருகிறது.
குறிப்பாக, 'ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான்' உள்ளிட்ட வணிக நிறுவனங்களை இந்நிறுவனம் குறி வைத்துள்ளது. இதற்கு, ஏத்தர், டி.வி.எஸ்., ஓலா உள்ளிட்ட மின் ஸ்கூட்டர்களை, இந்நிறுவன வணிகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதை பயன்படுத்தும், ஓட்டுநர்களுக்கு காப்பீடு, வாகன பராமரிப்பு, பேட்டரி பரிமாற்றம் உள்ளிட்டவை இந்நிறுவனம் சார்பில் செய்து தரப்படுகிறது.
இந்நிறுவனம், பெங்களூருவில் மட்டும் 3,000 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகிறது. அதேபோல, சென்னையில் அடுத்த ஓராண்டில் 5,000 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது, முதற்கட்டமாக 25 வாகனங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.